
சித்தார்த்-சமந்தா காதல் பிரேக் அப் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கான காரணம் பற்றி விசாரித்தபோது பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. இணைய தள பக்கத்தில் சித்தார்த்&-சமந்தா இருவருமே உடனுக்குடன் தங்கள் கருத்தை வெளியிடுவதில் ஆர்வம் காட்டுபவர்கள். பிரேக் அப் தகவல் வெளியானதையடுத்து கோபத்துடன் பொங்கிய சமந்தா, ‘நான் பாதிக்கப்பட்டவள் கிடையாது. இது எனது சொந்த விஷயம்‘ என குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து சித்தார்த் தனது இணையதள பக்கத்தில் ‘என் வாழ்வில் இருள் சூழ்ந்த நேரத்திலும் நான் நம்பிக்கையை இழந்துவிடாமல் என்னை காத்து வருகிறான் இறைவன்' என குறிப்பிட்டிருப்பதுடன் தான் நடித்துள்ள ‘எனக்குள் ஒருவன்‘ படத்தின் கிளிப்பிங்சையும் அத்துடன் லிங்க் கொடுத்திருக்கிறார். இப்படத்தில் நடித்திருக்கும் ஹீரோயின் தீபா சன்னிதிதான் சித்தார்த்-சமந்தா பிரிவுக்கு காரணம் என்றும் பேச்சு எழுந்துள்ளது.
சித்தார்த்-தீபா இருவருமே ஏற்கனவே ஜோடியாக வலம் வந்தவர்கள். இப்படத்தில் ஹீரோயின் வாய்ப்பை அவருக்கு சித்தார்த்தான் வாங்கித் தந்தாராம். இவர்களுக்குள் ஏற்பட்ட நெருக்கம் சமந்தாவுக்கு தெரிந்து அவர் கோபப்பட்டார். இது பற்றி சித்தார்த்&சமந்தா நட்பு வட்டாரத்தில் விசாரித்தபோது தீபா&சித்தார்த் நெருக்கத்தை மறைப்பதுடன், இருவரின் பிரேக் அப் தகவல் தங்களுக்கு அதிர்ச்சி தந்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
0 comments:
Post a Comment