Wednesday, January 14, 2015

c112
பலத்த எதிர்பார்ப்புக்கு பின்பு ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் ஆஸ்கர் பில்ம்ஸ் தயாரித்திருக்கும் “ஐ” படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. “ஐ” படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.
பாடி பில்டிங்கில் மிஸ்டர் இந்தியாவாகிவிட வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.எமியின் தீவிர ரசிகராக உள்ள விக்ரமுக்கு அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அதை பயன்படுத்தி மாடலிங் துறையில் முதல் இடத்தை பிடிக்கிறார் விக்ரம். எதிர்பாராத விதமாக ஒரு நாள் விக்ரமின் உடல் அகோரமாக மாறுகிறது. இதற்கு காரணமானவர்களை கண்டு பிடித்து எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் கதை.
திருமண நாளில் மணப்பெண் எமியை கடத்திச் செல்லும் காட்சியில் ஆரம்பிக்கிறது படம். விறுவிறுப்பாக தொடங்கி பரபரப்பாக நகர்கிறது கதை. எமியை பாழடைந்த வீட்டில் அடைத்து வைத்துவிட்டு பழிவாங்க ஆரம்பிக்கிறார் விக்ரம். பிளாஷ்பேக்கை சொல்லிருக்கும் விதம் ரசிக்கவைக்கிறது.
விக்ரமின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது அதற்கு போட்டியாகவே எமியும் நடித்துள்ளார். எமிஜாக்சன் அழகு பதுமையாக வந்து அனைவரது மனதையும் கொள்ளை கொள்கிறார். சந்தானம் குணச்சித்திரமும் காமடியும் கலந்து நடித்துள்ளார். இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் அனைத்தும் கட்சிதமாக உள்ளத்து. ஏ.ஆர் ரஹ்மானின் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார்.

0 comments:

Post a Comment