Monday, January 12, 2015

லிங்கா திரைப்படம் வெறும் நான்கு கோடி வசூல். இது தமிழ்நாட்டில் அல்ல, ஹிந்தியில் வெளியான 'லிங்கா' படம் அங்கு வெறும் நான்கு கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாம்.
படத்தை டிஜிட்டலில் வெளியிட்டதற்கான செலவைக் கூட வசூலிக்க முடியாமல் படு தோல்வியடைந்து விட்டதாம். கடந்த சில நாட்களாகவே 'லிங்கா' படத்தின் வசூல் நிலவரம், வினியோகஸ்தர்கள் உண்ணாவிரதம், தயாரிப்பாளரின் பேச்சு என பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.
கடந்த மாதம் 26ம் தேதியன்று வெளியான 'லிங்கா'  படத்தின் ஹிந்திப் பதிப்பு ஒரு சில நாட்களுக்குள்ளாகவே பல திரையரங்குகளிலிருந்து தூக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டிலும் பல திரையரங்குகளிலும் படத்தைத் தூக்கி விட்டார்கள்.
ஒரு சில நகரங்களில் மட்டும் சில காட்சிகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அவற்றிலும் பொங்கல் வெளியீடாக புதுப்படங்கள் வரும் போது 'லிங்கா' படத்தைத் தூக்கி விடுவார்கள் என்கிறார்கள். ஆக, 'லிங்கா'  படத்தின் மொத்த வியாபாரமும் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வந்து விடும்.
இதற்கு மேல் மற்ற ஊர்களில் 'ஷிப்டிங்' முறையில் திரையிட்டால் கூட சில ஆயிரங்கள் மட்டும்தான் வசூலாகும். மொத்தத்தில் 'லிங்கா' படத்தைத் தமிழகத்தில் திரையிட்ட வகையில் மொத்தமாக சுமார் 50 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக வினியோகஸ்தர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல இடங்களில் வாங்கிய விலைக்கு பாதித் தொகை கூட வசூல் ஆகவில்லை என்கிறார்கள். படத்தின் வெளியீட்டுத் தேதியைத்தான் அனைவரும் ஒட்டு மொத்தமாகக் குறை கூறுகிறார்கள்.
ரஜினிகாந்த் பிறந்த நாளைத் தவிர்த்து அடுத்த வாரத்தில் படம் வெளியாகியிருந்தால் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் விடுமுறை என்பதால் பலரும் குடும்பத்துடன் வந்து பார்த்து ரசித்திருப்பார்கள் என்கிறார்கள்.
ஒருவரைத் திருப்திப்படுத்துவதற்காக ஒட்டு மொத்தமாக வியாபாரத்தையே கெடுத்துவிட்டார்கள் என்பதுதான் பலரின் குற்றச்சாட்டாக உள்ளது. 

0 comments:

Post a Comment