Monday, January 12, 2015



பாலிவுட் படங்களுக்கான ஸ்டார் கில்ட் விருதுகள் 2015 (Star Guild Awards 2015) நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் பிரியங்கா சோப்ராவின் மேரிகோம் திரைப்படம் ஐந்து விருதுகளை பெற்றுள்ளது.

சிறந்த நடிகை, சிறந்த புதுமுக இயக்குனர், சிறந்த காஸ்ட்யூம், சிறந்த வசனம் மற்றும் சிறந்த கில்ட் பிரசிடெண்ட் படம் ஆகிய ஐந்து விருதுகளை மேரிகோம் திரைப்படம் வாங்கி குவித்துள்ளது.

மேலும் பிகே படம் சிறந்த திரைப்படமாகவும், பிகே இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி சிறந்த இயக்குனராகவும், தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஹெய்டர் படத்தில் நடித்த ஷாஹித் கபூருக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது. மேலும் இந்த வருடத்தின் சிறந்த எண்டர்டெய்னர் விருது தீபிகா படுகோனேவுக்கு கிடைத்துள்ளது. மேலும் அபிஷேக் பச்சன், அலியா பட், ஷாரதா கபூர், ஆகியோர்களுக்கும் பல்வேறு பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது.

0 comments:

Post a Comment