தமிழ்த் திரையுலகத்தில் இன்றைய தலைமுறை நடிகர்களிடையே அவ்வளவாகப் போட்டி பொறாமை எதுவுமில்லை. ஒரு சிலர் மட்டும்தான் மனதளவில் அப்படிப்பட்ட விஷயங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், அதை பொது இடங்களில் காட்டிக் கொள்வதில்லை.
சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு ஒருவரைப் பற்றி மற்றவர் பாராட்டுவதும், அவர்கள் படத்தை இவர்கள் விளம்பரப்படுத்துவதும், இவர்கள் படத்தை அவர்கள் விளம்பரப்படுத்துவதும் நடந்து கொண்டிருக்கிறது. அந்த விதத்தில் தற்போது பலராலும் கவனிக்கப்பட்டு வரும் படமாக படம் இருந்து வருகிறது. இந்த படத்திற்காக சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நாயகி எமி ஜாக்சன் ஆகியோர் அவர்களுடைய சமூக வலைத்தளங்களில் பல தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.
நாயகன் விக்ரம் எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் செயல்படவில்லை. இருந்தாலும் மற்ற சில நடிகர்கள் 'ஐ' படத்திற்காக சமூக வலைத்தளங்களில் தகவல்களை வெளியிடுவது ஆச்சரியமாக உள்ளது. அவர்களில் தனுஷ், தனிக் கவனம் பெறுகிறார்.
நேற்று கூட, “ஐ’ இன்னும் இரண்டு நாட்களில்…திரையில் ஒரு மாயம் நடப்பதைப் பார்க்க உள்ளோம். உங்களுக்கு அருகாமையில் உள்ள திரையரங்குகளில் படத்தைப் பாருங்கள். இம்மாதிரியான கடின உழைப்புக்கு நாம் மரியாதை செய்ய வேண்டும்,” என்று கூறியிருந்தார்.
“ஐ நாளை மறு தினம் முதல்…” என டிவீட் செய்துள்ளார். அதோடு, அவருடைய அனேகன் படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நடந்து வருவதாகவும் விரைவில் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அடுத்த படமும் ஓட வேண்டும் என்று நினைக்கும் தனுஷின் மனது பாராட்டுக்குரியது, அதை செயல்படுத்தியிருப்பதும் வரவேற்புக்குரியது.
0 comments:
Post a Comment