
இணைய திருடர்கள் உத்தம வில்லன் படத்தையும் விடவில்லை. பொங்கலுக்கு படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்க முன்பே இணையத்தில் சிலர் ட்ரெய்லரை திருட்டுத்தனமாக பதிவேற்றியிருக்கிறார்கள்.
கமல், ஜெயராம், ஆண்ட்ரியா, பூஜா குமார், ஊர்வசி, பார்வதி நாயர் நடித்துள்ள உத்தம வில்லனை நடிகரும் கமலின் நண்பருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். கே.விஸ்வநாத், கே.பாலசந்தர் போன்ற ஜாம்பவான்களும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
பொங்கலுக்கு படத்தின் ட்ரெய்லரை வெளியிடுவதாக இருந்த நேரம் அதற்கு முன்பே இணையத்தில் திருட்டுத்தனமாக ட்ரெய்லரை பதிவேற்றினர். ஆனால் தற்போது அந்த ட்ரெய்லர் யூட்யூபிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment