Wednesday, January 14, 2015

\'ஐ\' ஆயிரம் கோடி வசூல் செய்யும்! தயாரிப்பாளர் உறுதி - Cineulagam


ஐ என்ற பிரமாண்ட படத்தை தயாரித்தவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். இப்படம் நாளை உலகம் முழுவது பல இடங்களில் ரிலிஸாக உள்ளது.
இது குறித்து அவர் கொடுத்த பேட்டியில் ‘சீனா, ஜப்பான் தவிர உலகம் முழுவதும் நாளை - புதன்கிழமை படம் வெளியாகிறது. பாகிஸ்தான், உக்ரைனிலும் நாளை படம் திரைக்கு வருகிறது.
மேலும், இந்த படத்தின் 40 சதவீத காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் பிப்ரவரி சீனாவில் புத்தாண்டு கொண்டாடப்படுவதால், அப்போது ‘ஐ’ படத்தை அங்கு திரையிட திட்டமிட்டு இருக்கிறோம். இதேபோல் ஜப்பானிலும் அடுத்த மாதம் வெளியிடப்படும். உலகம் முழுவதும் இந்தப் படம் 1000 கோடிகள் வசூலிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

0 comments:

Post a Comment