Tuesday, January 13, 2015

அரண்மனை படத்துக்குப் பிறகு சுந்தர் சி இயக்கும் படம் 'ஆம்பள'.
இதில் விஷால் ஹீரோவாகவும், ஹன்சிகா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன், மாதவி லதா, மதூரிமா, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண், வைபவ், சதீஷ், சந்தானம் என ஏகப்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
தனது முந்தைய படத்தில் திரில்லர் கலந்த காமெடியை கொடுத்த சுந்தர் சி, இந்த படத்தில் கிளாமர் கலந்த காமெடியை தெளிக்க உள்ளாராம். விஷால் தயாரித்திருக்கும் இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் தலைப்புக்கு உரிமை கொண்டாடி ஸ்ரீசாய் சினி சர்க்கியூட் நிறுவனத்தைச் சேர்ந்த கோபாலன் என்பவர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
‘ஆம்பள’ படத்தின் தலைப்பு எனக்கு சொந்தமானது. ஏற்கெனவே இந்த தலைப்பை கில்டில் பதிவு செய்து வைத்துள்ளேன். மேலும் இதே தலைப்பில் படம் ஒன்றின் 40 சதவிகித அளவுக்கு படப்பிடிப்பும் நடத்தி முடித்திருக்கிறேன். தற்போது, அதே தலைப்புடன் வேறு ஒரு படம் வெளி வந்தால் தனக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என்று 15-வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதியிடம், விஷாலின் வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டுக் கொண்டதையடுத்து, வழக்கை ஒருநாள் ஒத்திவைத்தார். தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதனால் ஆம்பள படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment