Saturday, January 17, 2015

இப்படி கூறியிருப்பவர் வேறு யாருமில்லை, நயன்தாரா, சிம்புவை வைத்து இது நம்ம ஆளு படத்தை இயக்கியிருக்கும் பாண்டிராஜ்.

இந்தப் படத்தைத் தொடங்கியபோதே பிரச்சனை. சிம்பு சரியாக ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வருவதில்லை என்று புகார். படம் முடிந்தநிலையில் அது குறித்து பிரபல நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார் பாண்டிராஜ்.

நயன்தாரா சொன்ன தேதியில் சரியாக ஒன்பது மணிக்கே மேக்கப்புடன் ஸ்பாட்டில் தயாராகிவிடுவார் என்றவர், சிம்புதான் பிரச்சனை. சரியாக ஷுட்டிங்கிற்கு வரமாட்டார். வந்தால் ஒரே டேக்கில் காட்சியை ஓகே செய்துவிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

இது நம்ம ஆளு சிம்புவின் சொந்தப் படம். அதாவது அவரது தந்தை டிஆர்.தான் படத்தை தயாரிக்கிறார். சொந்தப் படத்துக்கே இத்தனை சொதப்பல் என்றால் மற்றவர்களின் படங்களுக்கு...?

0 comments:

Post a Comment