Friday, January 16, 2015



கரண், அஞ்சலி நடித்த தம்பி வெட்டோத்தி சுந்தரம் படம் தெலுங்கில் சிம்ஹாத்ரிபுரம் என்ற பெயரில் வெளியிடப்பட உள்ளது. கரண், அஞ்சலி, சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான படம் தம்பி வெட்டோத்தி சுந்தரம்.

 படித்துவிட்டு ஆசிரியர் வேலைக்கு காத்திருந்து வேலை கிடைக்காததால் கடத்தல்காரராக ஆகும் கரண் ஒரு பெரிய ரவுடியின் மகளான அஞ்சலியை காதலிப்பார். காதல் மற்றும் கடத்தலால் கரணின் வாழ்க்கை என்னவாகிறது என்பது தான் கதை. இந்த படம் தற்போது தெலுங்கில் டப் செய்யப்பட்டு சிம்ஹாத்ரிபுரம் என்ற பெயரில் ரிலீஸாக உள்ளது. 

படத்தை ஸ்ரீபூரணி கிரியேஷன்ஸ் பேனரின் பல்லாரி சாகர் குமார் தயாரித்துள்ளார். சித்தியுடனான பிரச்சனைக்கு பிறகு கிட்டத்தட்ட ஆந்திராவில் செட்டிலான அஞ்சலிக்கு இந்த படம் கைக்கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தமிழில் ஜொலிக்க முடியாத வெட்டோத்தி சுந்தரம் ஆந்திரா ரசிகர்களை கவர்ந்திழுப்பாரா என்பதை தெரிந்து கொள்ள காத்திருக்க வேண்டும். படத்தின் டப்பிங் வேலை முடிந்துவிட்டது. 

படம் அடுத்த மாதம் ரிலீஸாக உள்ளது. அஞ்சலி தற்போது 2 தமிழ் படங்கள், ஒரு கன்னடம் மற்றும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment