Sunday, January 18, 2015

அபிஷேக் பச்சனை மணந்த ஐஸ்வர்யாராய் நடிப்பிலிருந்து ஒதுங்கி மகள் ஆராத்யாவை வளர்ப்பதில் தீவிர கவனம் செலுத்தி வந்தார். மீண்டும் நடிக்க கேட்டு பலர் அணுகியும் ஏற்காமல் தவிர்த்தார். 4 வருட இடைவெளிக்கு பிறகு ரீ என்ட்ரிக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா.இந்தியில் பல்வேறு படங்களை இயக்கிய சஞ்சய் குப்தா இயக்கும் ‘ஜஸ்பா‘ படம் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார்.

இது பற்றி குப்தா கூறும்போது, ‘இக்கதைக்கு நிறைய ஆக்ஷன் காட்சிகள் தேவைப்படுகிறது. அதற்கு தகுதியானவர் ஐஸ்வர்யாராய். தற்போது அவர் ஸ்டண்ட் பயிற்சி பெற்று வருகிறார். ஷபானா ஆஸ்மியும் இப்படத்தில் நடிக்கிறார். இதுவொரு ஸ்பெஷல் படமாக இருக்கும்‘ என்றார். ஐஸ்வர்யாராய் மீண்டும்  படப்பிடிப்புக்கு சென்றாலும் அங்கிருந்தபடியே செல்போனில் மகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதற்கான குறிப்புகளை குடும்பத்தினருக்கு தெரிவிப்பார்.

இதற்கிடையில் ஐஸ்வர்யா வரும் வரை அபிஷேக் பச்சன் படப்பிடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு வீட்டிலேயே ஆராத்யாவுடன் தங்கி இருக்க முடிவு செய்துள்ளார். இம்மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை ஐஸ்வர்யாராய் கால்ஷீட் தந்திருக்கிறார். அதன்பிறகு சில நாட்கள் ஆராத¢யாவுடன் தங்கி இருந்துவிட்டு அடுத்து கரண் ஜோஹர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

0 comments:

Post a Comment