தமிழில் ‘கொம்பன்’, ‘சிப்பாய்’ படங்களில் நடிக்கும் லட்சுமி மேனன் கூறியதாவது:ஒரே ஹீரோவுடன் தொடர்ந்து நடித்தால், அவருடன் சேர்த்து கிசுகிசு வருவது சகஜம். ஆரம்பத்தில் என்னைப் பற்றி வந்த கிசுகிசுக்களை கேள்விப்பட்டு வருத்தப்பட்டேன்.
இப்போது இல்லை. வதந்திகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கக் கூடாது.‘கொம்பன்’ படத்தின் கதையைக் கேட்டதும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். கார்த்தி, ராஜ்கிரண், தம்பி ராமையா, கோவை சரளா என அனைவரும் ஒரே குடும்பமாக இருந்து ஷூட்டிங்கில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.
இந்தப் படம் எனக்கு மைல் கல்லாக அமையும். என் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். இப்போது கேரளாவில் படித்துக் கொண்டிருக்கிறேன். வரும் காலத்தில் என்ன செய்யப் போகிறாய் என்று கேட்கிறார்கள். நான் எதையும் முன்கூட்டியே தீர்மானிப்பதில்லை. வருவதை எதிர்கொள்வேன். திருமணத்தைப் பற்றி கேட்கிறார்கள். அரேஞ்டு மேரேஜ் எனக்குப் பிடிக்காது. அதனால் காதல் திருமணம்தான். இன்னும் யாரையும் காதலிக்கவில்லை.
Sunday, January 18, 2015
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment