இயக்குனர் பாண்டிராஜ் தற்போது சிம்புவை வைத்து ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாண்டிராஜ் அடுத்தப் படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரிக்கிறார். இரண்டு சிறுவர்களை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் பிந்துமாதவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரத்திலும் நடிக்கவிருக்கிறார். இதில் சூர்யா தன் மனைவி ஜோதிகாவுடன் சேர்ந்து தம்பதிகளாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அப்படி ஜோதிகா நடிக்க தயார் இல்லையெனில் அவருக்கு பதிலாக மற்றொரு முன்னணி நடிகை நடிப்பார் தெரிகிறது. சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முடிவடைகிறது.

0 comments:
Post a Comment