Monday, January 12, 2015

சச்சின், வீரம், மன்மதன் அம்பு போன்ற படங்களில் தன் இசையால் அனைவரையும் கவர்ந்து இழுத்தவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் தற்போது விஜய் நடித்து வரும் புலி படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இப்படத்திற்கான 3 பாடல்களை ஏற்கனவே கொடுத்து, அதில் ஒரு பாடலை படக்குழு ஷுட் செய்து விட்டதாம். இந்நிலையில் இவர் கொடுத்த ஒரு பாடல் படக்குழுவை வெகுவாக கவர்ந்ததாம்.
அதிலும் குறிப்பாக இளைய தளபதிக்கு அந்த பாடல் மிகவும் பிடித்து விட்டதாம், இதனால், தேவி ஸ்ரீ பிரசாத்தை கட்டி பிடித்து பாராட்டினாராம்.
விஜய்யை சந்தோஷப்படுத்திய தேவி ஸ்ரீ பிரசாத்! - Cineulagam

0 comments:

Post a Comment