Monday, January 12, 2015

நடிகை த்ரிஷா, தனக்கும் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் வருகிற 23 -ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது. திருமண தேதி இன்னும் நிச்சயமாகவில்லை. அதனை நானே தெரிவிப்பேன். அதற்குள் நீங்களாகவே எதையும் தீர்மானிக்காதீர்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

த்ரிஷாவுக்கு திருமணம் - தயாரிப்பாளர்கள் எதிர்ப்பா...?

த்ரிஷாவின் திருமண செய்தியால் அவரை வைத்து படம் எடுத்திருக்கும் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும், அவர்கள் த்ரிஷா திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பிரபல மாலை நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
 
 




















 நடித்துள்ள என்னை அறிந்தால், பூலோகம் திரைப்படங்கள் விரைவில் வெளிவர உள்ளன. இந்த வருடம் மேலும் இரு படங்கள் வெளியாக உள்ளன. த்ரிஷா திருமணம் செய்தால் இந்தப் படங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தயாரிப்பாளர்கள் கருதுவதால் த்ரிஷாவின் திருமணத்துக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
 
ஆனால் அப்படி யாரும் திருமணத்தை எதிர்க்கவில்லை என த்ரிஷாவின் நட்பு வட்டாரம் செய்தியை மறுத்துள்ளது.

0 comments:

Post a Comment