Monday, January 12, 2015

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அனேகன் ஃபெப்ரவரி 13 ஆம் தேதி காதலர்தின ஸ்பெஷலாக வெளியாகிறது.

ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ள இப்படம் பல ஜென்மங்களாக தொடரும் காதலைப் பற்றியது என கூறப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படம் பல வாரங்கள் முன்பே முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ஐ, என்னை அறிந்தால் போன்ற படங்களின் வெளியீடு காரணமாக ஃபெப்ரவரிக்கு பட வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர்.
 
தனுஷ் நடித்துள்ள இந்திப் படம் ஷமிதாப் ஃபெப்ரவரி 6 திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.


 
 

0 comments:

Post a Comment