அமிதாப்-தனுஷ் நடிக்கும் ‘ஷமிதாப்’ பட இயக்குனர் ஆர்.பால்கி கூறியது:உலகத்தில் யாரும் இத்தகைய சாதனையை நிகழ்த்தவில்லை. இதை கொண்டாடாவிட்டால் இளையராஜாவுக்கும், இசையுலகுக்கும் நீதிமறுத்தவர்கள் ஆகிவிடுவோம்.
தனக்கென விழா எடுப்பதை இளையராஜா எப்போதும் விரும்பியது கிடையாது. மும்பையில் உள்ள இசை அமைப்பாளர்கள் அனைவரும் இணைந்து இவ்விழாவை நடத்துகிறார்கள். அமிதாப்பச்சன் தலைமை தாங்கி வாழ்த்துகிறார். பாலிவுட்டில் இளையராஜாவுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ஷமிதாப் படத்துக்கு அவர்தான் இசை அமைத்திருக்கிறார். அந்த பாடல்களை அவர் மேடையில் இசைப்பார். இம்மாதம் 20ம் தேதி விழா நடத்த திட்டமுள்ளது. விரைவில் இதுபற்றி இறுதி செய்யப்படும் என்றார்.

0 comments:
Post a Comment