விஷால் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் ஆம்பள, இதில் நாயகிகளாக ஹன்சிகா, மதுரிமா, மாதவி நடிக்கின்றனர். சுந்தர்.சி இயக்குகிறார்.
காதல், காமெடி படமாக தயாராகிறது. விஷாலுக்கு மூன்று அத்தைகள். அவர்கள் தங்கள் மகள்களை விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகின்றனர். யாரை மணந்தார் என்பது கதை.
இதில் அத்தைமார் கேரக்டரில் ரம்யாகிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா நடிக்கின்றனர். அவர்களின் மகள்களாக ஹன்சிகா, மதுரிமா, மாதவி வருகின்றனர். இவர்கள் தவிர பிரபு, சந்தானம், சதீஷ், துளசி, வைபவ், பிரதீப்சிங், ராவத், ராஜீவ்பிள்ளை, ஸ்ரீமன், கவுதம், விச்சு, அபிஷேக், விஜயகுமார், தளபதி தினேஷ், கனல் கண்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
0 comments:
Post a Comment