பிப்ரவரியில் இணையும் கார்த்தி-நயன்தாரா ஜோடி
மெட்ராஸ் பட வெற்றியை அடுத்து கார்த்தி நடித்துள்ள 'கொம்பன்' படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் அவருடைய அடுத்த படமான 'காஷ்மோரா' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நாள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
விஜய் சேதுபதியின் 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் இயக்குனரான கோகுல், கார்த்தியின் அடுத்த படமான காஷ்மோராவை இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி முதல் தொடங்கும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் பத்திரிகைகள் காஷ்மோரா படத்தை திகில் படம் என்று எழுதி வருவதை மறுத்த கோகுல், இது முற்றிலும் வித்தியாசமாக அனைத்து அம்சங்களும் நிறைந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
கார்த்தி மற்றும் நயன்தாரா முதன்முதலாக ஜோடி சேரவுள்ள இந்த படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.மேலும் காஷ்மோரா படத்தில் நடித்துக்கொண்டே நாகார்ஜுனனுடன் நடிக்கும் தமிழ், தெலுங்கு என இருமொழி படத்திலும் கார்த்தி நடிப்பார் என கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment