Thursday, January 15, 2015

வரும் பொங்கல் திருநாளில் ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் வெளிவரவுள்ள 'ஐ' திரைப்படத்தை தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் கண்டிப்பாக பார்த்து ஆதரவு தரவேண்டும் என்பதற்கு பல நியாயமான காரணங்கள் உள்ளது. இந்த படத்தில் ஷங்கர் மற்றும் விக்ரம் ஆகியோர்களின் கடுமையான உழைப்பிற்காக நாம் ஏன் 'ஐ' படத்திற்காக ரூ.120 செலவழிக்க வேண்டும் என்பதற்காக ஒருசில காரணங்களை பார்ப்போம்.

1. கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவடைந்துள்ளது. இந்திய திரையுலகில் படப்பிடிப்பிற்காக மட்டும் மிக நீண்டகாலம் எடுத்துக்கொண்ட திரைப்படம்.

2. விக்ரமின் உடல் எடை கூட்டுதல் மற்றும் எடை குறைத்தல். திடீரென 86 கிலோவும், அடுத்து சில மாதங்களிலேயே 56 கிலோவும் கொண்ட உடல்வாகை மாற்றிய விக்ரமின் அர்ப்பணிப்பு உழைப்பு.

3. பி.சி.ஸ்ரீராமின் அற்புதமான கேமரா ஒர்க். முக்கியமாக 'பூக்களே சற்று ஓய்வெடுங்கள்' பாடலுக்காக அவர் பயன்படுத்தியுள்ள வண்ணங்கள்.

4. சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் மற்றும் சுரேஷ்கோபியின் வித்தியாசமான பாத்திரப்படைப்பு.

5. ஷங்கரின் முதல் ரொமாண்டிக் மற்றும் த்ரில் அம்சங்கள் கொண்ட கதையமைப்பு.

6. நான்கு வெவ்வேறு தோற்றங்களுக்காக வித்தியாசமான முறையில் குரலை மாற்றி அனைத்து மொழிகளிலும் விக்ரம் டப்பிங் பேச எடுத்துக்கொண்ட முயற்சி.

7. உலகத்தரமான படங்கள் தயாராகும் "WETA Studios" நிறுவனத்தின் பங்களிப்பு கொண்ட முதல் இந்திய திரைப்படம்.

8. இந்திய சினிமா உலகில் தயாரான மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம்.

9. ஷங்கரின் பிரமாண்டம் மற்றும் விக்ரமின் அர்ப்பணிப்புத்திறன் ஒருங்கே பெற்ற திரைப்படம்.

10. இந்த படத்திற்காக வேறு படங்களில் கடந்த மூன்று வருடங்களாக ஒப்பந்தமாகாமல் இருந்த விக்ரம், எமி ஜாக்சன் போன்ற முன்னணி கலைஞர்களின் தியாகம்.

0 comments:

Post a Comment