Wednesday, January 14, 2015



கவர்ச்சி ஆட்டம், குத்தாட்டம் போன்ற காட்சிகளில் மட்டும் இதுவரை நடித்து வந்த நடிகை சன்னிலியோன் அடுத்து ஒரு படத்தில் கிளாசிக்கல் நடனம் ஆட இருப்பதாகவும், அதற்காக அவர் நடனப்பயிற்சி பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

சன்னிலியோன் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'லீலா'. இந்த படத்தின் தயாரிப்பாளர் அகமதுகான் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, 'லீலா படத்தில் இதுவரை யாரும் காணாத சன்னிலியோனை பார்க்க முடியும். இந்த படம் நடனம் சம்பந்தப்பட்ட திரைப்படம் என்றும் இதற்காக சன்னி லியோன் கிளாசிக்கல் நடனம் கற்று வருவதாகவும் கூறினார். இது சன்னிலியோனின் வித்தியாசமான முயற்சி என்றும் கூறப்படுகிறது.

சன்னி லியோன், ஜெய் பானுசாலி முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரலில் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. இந்த படம் சன்னிலியோனின் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்பமாக இருக்கும் என்றும் அகமதுகான் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment