சிம்பு, பிரபுதேவா என இரண்டு காதல்களில் தோல்வி அடைந்த நடிகை நயன்தாரா சந்நியாசியாக மாற இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபு தேவாவை திருமணம் செய்வதற்காக கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்துவாக மதம் மாறிய நயன்தாரா, பிரபுதேவாவுடன் ஏற்பட்ட பிரேக் அப்புக்கு பிறகும் இந்துமதத்தை கடைபிடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் படப்பிடிப்பு ஒன்றுகாக கங்கோத்ரி சென்றபோது, அங்கு சில இந்து சந்நியாசிகளை பார்த்து, சந்நியாசியாக மாறுவதற்கு உண்டான வழிமுறைகளையும், கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் கேட்டறிந்து வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது மாஸ், நண்பேண்டா, இது நம்ம ஆளு, மாயா, தனி ஒருவன், நானும் ரவுடிதான் ஆகிய படங்களில் நடித்து வரும் நயன்தாரா, இந்த படங்களை முடித்தவுடன் சந்நியாசம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment