
சிம்பு, நயன்தாரா நடிக்கும் இது நம்ம ஆளு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போதே அடுத்தப் படத்தை தொடங்கினார் பாண்டிராஜ். சிறுவர்களை மையப்படுத்திய இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது.
படத்தின் சந்தை மதிப்பை உயர்த்த கௌரவ வேடத்தில் சூர்யா நடிக்கயிருக்கிறார். அவருடன் ஜோதிகாவும் நடிப்பார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் ஜோதிகா நடிப்பில் மலையாள ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment