ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிக்க இன்னும் இரண்டு நாட்களில் திரைக்கு வர உள்ள ‘ஐ’ படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பமான சில மணி நேரங்களிலேயே ஒரு வாரத்திற்கான முன் பதிவு முடிவடைந்துள்ளது.
ஒரே சமயத்தில் பலர் முன் பதிவு செய்ய முயற்சித்ததால் சில தியேட்டர் இணைய தளங்கள் செயல்பட முடியாமல் முடங்கிப் போனதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் நான்கைந்து நாட்களுக்கு படத்திற்கான முன் பதிவுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒரு தமிழ்ப் படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருப்பதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்களாம்.
ஒரு தமிழ்ப் படத்திற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம்தான்.
பொதுவாக, ரஜினிகாந்த் படங்களுக்குத்தான் இப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும், அதையும் ‘ஐ’ படம் முறிடியத்து விடும் என்கிறார்கள்.
0 comments:
Post a Comment