Monday, January 12, 2015

surya-hari

நடிகர் சூர்யா, இயக்குனர் ஹரி கூட்டணியில் விரைவில் சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. சிங்கம் தொடரின் மூன்றாவது படமாக இப்டம் அமைய உள்ளது. இந்தக் கூட்டணி இணையும் ஐந்தாவது படமாக இந்தப் படம் உருவாக உள்ளது. சிங்கம் படத்தின் முதல் பாகம் 2010ம் ஆண்டிலும், இரண்டாம் பாகம் 2013ம் ஆண்டிலும் வெளிவந்தது.
இவற்றிற்கு முன் இயக்குனர் ஹரி, சூர்யா இணைந்து “வேல், ஆறு” ஆகிய படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அநேகமாக அடுத்த மாதம் முடிவடைந்து விடும். அதைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சில காட்சிகளில் சூர்யா நடிக்க உள்ளார்.
அதை முடித்துக் கொடுத்ததும் உடனடியாக ஹரி இயக்கும் சிங்கம் 3 படத்தில் நடிக்க ஆரம்பிக்க உள்ளார். முந்தைய படங்களைப் போலவே இந்தப் படத்தையும் பரபர ஆக்ஷன் படமாகத்தான் உருவாக்க உள்ளார்களாம். சில மாதங்களுக்கு முன்பே சுவிட்சர்லாந்து சென்று படத்தின் மொத்தக் கதை, திரைக்கதை, வசனத்தை ஹரி அவரது உதவியாளர்களுடன் எழுதி முடித்து விட்டாராம். படத்தின் நாயகி, மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடந்து கொண்டிருக்கிறதாம். சிங்கம் 3 படத்திலும் ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.

0 comments:

Post a Comment