Monday, January 12, 2015

62ef8048-4b0a-44b0-b0d1-6c7fe55f2020_S_secvpfலிங்கா படத்திற்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் நான் ஈ சுதீப் நாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது. சுதீப் தற்போது விஜய் நடிக்கும் படத்திலும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் பாகுபலி படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அத்தாரின்டிக்கி தாரேதி' தெலுங்குப் படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார். இப்படம் இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்திற்குப் பிறகு சுதீப் வேறு எந்த கன்னடப் படத்திலும் நடிக்காததால் பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படம் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. லிங்கா படத்திற்கு முன்பாகவே ரவிக்குமார், சுதீப் நடிக்கும் படத்தை ஆரம்பித்திருக்க வேண்டும். கடைசி நேரத்தில் ரஜினிகாந்த் , லிங்கா படத்தில் நடிக்க முடிவெடுத்த பின், அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, சுதீப் அவருடைய படத்தை தள்ளி வைத்து, ரவிக்குமாரை லிங்கா படத்தை இயக்க அனுப்பி வைத்தார்.
அந்த நன்றிக்காகத்தான் சுதீப்பையும் லிங்கா இசை விழாவில் அழைத்து கௌரவித்தனர். சுதீப்பிற்கு தற்போது தமிழ், தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உள்ளதால் முதலில் கன்னடத்தில் மட்டும் எடுக்க திட்டமிட்டிருந்த படத்தை தற்போது மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் எடுக்க முடிவெடுத்துள்ளனர். அதற்கேற்றபடி தமிழ், தெலுங்குக்கு பொருத்தமான நடிகர்களை படத்தில் நடிக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம்.

0 comments:

Post a Comment