Thursday, January 15, 2015

என்னை அறிந்தாலில் அஜித் டபுள் ஆக்‌ஷனா? வார்த்தையை விட்ட ஹாரிஸ் - Cineulagam
என்னை அறிந்தால் படம் இந்த பொங்கலுக்கு வரவில்லை என்பது தல ரசிகர்களுக்கு வருத்தம் தான். ஆனால், இப்படத்தை பற்றி நாளுக்கு நாள் செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் இப்படக்குழு பேட்டியளித்தது. இதில் கௌதம், ஹாரிஸ் பங்கேற்றனர்.
அப்போது ஹாரிஸ் படத்தில் சத்யா, சத்யதேவ் என இரண்டு கேரக்டர் என வார்த்தை விட்டார், உடனே ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தல டபுள் ஆக்‌ஷன் என ஸ்டேட்டஸ் போடத்தொடங்கி விட்டனர்.

0 comments:

Post a Comment