Wednesday, January 14, 2015

மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் ரசிகர்களை கவர்ந்த நடிகை பிரயாகா, தற்போது புதியதாக மலையாள திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகை நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசில் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரயாகா நடிக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு கார்ட்டூன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பெயர்தான் கார்ட்டூனே தவிர முழுக்க முழுக்க ரொமான்ஸ் திரைப்படம் இது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் அனிமேஷன் நிபுணராக பஹத் பாசில் நடிக்கவுள்ளார்.

நடிகை பிரயாகாவின் சொந்த ஊர் கேரளாவில் இருந்தாலும், அவர் நடிக்கும் முதல் மலையாள திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்திலேயே பஹத் பாசில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதால் பிரயாகா குஷியில் இருப்பதாக கூறப்படுகிறது.


0 comments:

Post a Comment