அஜீத் தான் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் இரண்டு பேருக்காக ஹிட்டாக வேண்டும் என்று நினைக்கிறார்.
கோலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக இருந்த ஏ.எம்.ரத்னத்திற்கு இரண்டு படங்கள் படுத்ததால் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அவரை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். அந்த நேரம் தான் அவர் அஜீத்தை அணுகி ஆரம்பம் படத்தில் நடிக்குமாறு கேட்க அவரும் ஒப்புக் கொண்டார்.
ஆனால் ஆரம்பம் படம் நல்ல வசூல் செய்த போதிலும் ரத்னத்தின் கடன் முழுவதும் தீரவில்லை.
இதையடுத்து தான் அஜீத் மீண்டும் ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ளார். கௌதம் மேனனுக்கும் அண்மையில் எந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தான் என்னை அறிந்தால் படம் ரத்னம் மற்றும் கௌதமுக்காக ஹிட்டாக வேண்டும் என்று நினைக்கிறார் அஜீத்.
பொங்கலுக்கு கூட்டத்தோடு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம், வசூல் பாதிக்கும் என்று ரத்னம் அஜீத்திடம் தெரிவித்ததும் அவர் உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.
இதையறிந்த கௌதமும் தனது வேலையின் வேகத்தை சற்று குறைத்துக் கொண்டாராம்.
இரண்டு பேருக்கு நல்லது நடக்க வேண்டும் என்று விரும்புகிறார் அஜீத்.
Sunday, January 18, 2015
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment