Sunday, January 18, 2015

விஷ்ணு ருத்ரதாண்டவத்தில் இரண்டாவது வெற்றி! முழு விவரம் - Cineulagam
இந்திய சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் இணைந்து சிசிஎல் போட்டியை வருடம் தோறும் நடத்தி வருகின்றனர். இதில் சென்னை அணி இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்த சீசனில் ஏற்கனவே சென்னை அணி, கேரளா அணியை வீழ்த்தியது. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் இன்று வீர் மராத்தி அணியுடன் மோதியது.
முதலில் பேட் செய்த வீர் மராத்தி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கேட் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கெல்கர் 60 ரன்கள் எடுத்தார். சென்னை அணி சார்பில் கேப்டன் ஜீவா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதை தொடர்ந்து ஆடிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியை கொடுத்தது. சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விக்ராந்த் 4 ரன்னில் நடையை கட்டினார். ஆனால், விஷ்ணு மற்றும் ரமணா நிலைத்து நின்று அதிரடியாக ஆடி 12.3 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியை பெற்று தந்தனர். இதில் விஷ்ணு 82, ரமணா 54 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் சென்னை அணி தன் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

0 comments:

Post a Comment