Sunday, January 18, 2015

நடிகர் பரத் பிரேம்ஜி அமருடன் இணைந்து நடிக்கும் சிம்பா என்ற படம் விரைவில் தொடங்கயிருக்கிறது.
 
பரத் தனி ஹீரோவாக நடித்த படங்கள் சரியாகப் போகவில்லை. நீண்டகாலம் எடுத்து அவர் நடித்த சசியின், ஐந்து ஐந்து ஐந்து படமும் தோல்வியடைந்தது. முழுநீள காமெடிப் படமான, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்தியசாலையும் தோல்வி கண்டது. 
 
இந்தத் தொடர் தோல்விகளால் பரத்துக்கு வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. அவர் தற்போது பிரேம்ஜி அமரனுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். சிம்பா என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை அரவிந்த் ஸ்ரீதர் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார்.
 
இதுவொரு மாயத்தோற்றம் கொண்ட வித்தியாசமான படம் என பரத் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment