Monday, January 19, 2015



தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ஒரு பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் "என்னமா இப்படி பண்றீங்களேமா?" என்ற வசனம், சமீபத்தில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.
இப்போது இந்த வசனத்தை வைத்து, சிவகார்த்திகேயனுக்காக ஒரு பாட்டையே பாடி விட்டார்கள். அவரின் அடுத்த படமான 'ரஜினி முருகன்' படத்தில் ஒரு பாடல் "என்னமா இப்படி பண்றீங்களேமா?" என்று தொடங்குமாம். அந்த பாடலுக்கு இசையமைக்கும் டி.இமானே பாடியும் உள்ளார்.
கூடிய விரைவில் இதை தலைப்பாக வைத்து படம் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இயக்குனர் பொன்ராம் இயக்கி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

0 comments:

Post a Comment