Friday, February 20, 2015


பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி-ஐஸ்வர்யாராய் நடித்த படம் எந்திரன். ஹாலிவுட் தொழில் நுட்பத்தில் உருவான அந்த படத்தில் ரஜினி சயின்டிஸ்டாக நடித்திருந்தார். அதோடு, சந்தானம், கருணாஸ் உள்ளிட்டோரும் காமெடியன்களாக நடித்திருந்தனர். சிவாஜிக்கு பிறகு ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவான அந்த படமும் வெற்றி பெற்றது.

அதையடுத்து, விஜய் நடித்த நண்பன், விக்ரம் நடித்த ஐ படங்களை இயக்கிய ஷங்கர், அடுத்து மீண்டும் ரஜினியுடன் எந்திரன்-2வுக்காக இணையப்போவதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை பிரமாண்டமாக இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக வேறு நடிகையை நடிக்க வைக்கவே திட்டமிட்டிருந்த ஷங்கர், இப்போது ஐஸ்வர்யாராய் மீண்டும் நடிக்கத் தொடங்கியிருப்பதால் அவரையே ரஜினிக்கு ஜோடியாக்க முடிவு செய்துள்ளாராம். தற்போது ரஜினி-ஷங்கர் இருவருமே புதிய படம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதால் விரைவில் இதுபற்றிய தகவல்கள் அவர்கள்தரப்பில் இருந்து வெளியாகும் என்கிறார்கள். அதோடு, இந்த முறை படத்தை இந்தியிலும் பெரிய வெற்றி பெற வைப்பதற்காக அமீர்கானை இன்னொரு ஹீரோவாக நடிக்க வைக்கும் முயற்சியும் நடக்கிறதாம்.

0 comments:

Post a Comment