
தற்போது ‘உத்தமவில்லன்‘ பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கமலின் ராஜ்கமல், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்தின் ரிலீஸ் உரிமையை ஈராஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. ஏப்ரல் 2ம் தேதி படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக மார்ச் 1ம் தேதி ஆடியோ வெளியாகிறது.
இதையடுத்து பாபநாசம் படமும், பின்னர் விஸ்வரூபம் 2ம் வெளியிடுவதற்கான முயற்சிகள் நடக்கிறது. தற்போது தனது புதிய படத்துக்கான பணிகளை ஜரூராக தொடங்கி இருக்கிறார் கமல். இதுபற்றி கமல்ஹாசன், தனது உலகநாயகன் யூடியூப் இணைய தள பக்கத்தில், தற்போது மொரீஷியஸ் தீவில் அடுத்த படத்துக்கான லொகேஷன் தேர்வு செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார்.
0 comments:
Post a Comment