Thursday, February 12, 2015

நடித்த சிறுத்தை படத்தை இயக்கிய சிவா, அதன்பிறகு அஜீத் நடித்த வீரம் படத்தை இயக்கினார். அப்படத்தின் கதை ரஜினி நடித்த முரட்டுக்காளை படத்தை தழுவி இருந்தபோதும், அதையே இன்றைய பாணியில் புதுமைப்படுத்தி அஜீத் ரசிகர்கள் ரசிக்கும்படி படமாக்கியிருந்தார் சிவா. அதனால் அப்படமும் வெற்றி பெற்றது.

அதன்காரணமாகவே, தற்போது என்னை அறிந்தால் படத்தை அடுத்து தான் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பினை மீண்டும் சிவாவுக்கு கொடுத்திருக்கிறார் அஜீத். ஆனால், என்னை அறிந்தால் படத்தில் அஜீத்தை, கெளதம்மேனன் வேறு ஒரு பரிமாணத்தில் காட்டியிருப்பதால், சிவாவுக்கு தனது படத்தில் இன்னும் அஜீத்தை தனது முந்தைய படத்தை காட்டிலும் மாஸாக காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

முக்கியமாக, அஜீத் ரசிகர்கள் இந்த மாதிரி அஜீத்தை பார்க்கவே விரும்புவதால், ஏற்கனவே கதையை அஜீத்திடத்தில் சொல்லியிருந்த சிவா, இப்போது கதைக்குள் இன்னும் என்னென்ன புதுமைகளை செய்யலாம் என்ற விவாதத்தையும் தற்போது முடுக்கி விட்டிருக்கிறார். முக்கியமாக அடுத்த படத்திலும் வீரம் படத்தைப்போன்றே அஜீத்தை சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பிலேயே காண்பிக்க திட்டமிட்டருக்கும் சிவா, காட்சிகளை ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பிரமாண்டப்படுத்தவும் யோசித்துக்கொண்டிருக்கிறாராம்.

0 comments:

Post a Comment