Tuesday, February 10, 2015

சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போனால் திருமணம் செய்து கொள்வேன் என்று நமீதா கூறியுள்ளார். எங்கள் அண்ணா மூலம் தமிழில் அறிமுகமான நமீதா, ஒரு கட்டத்தில் மிக முக்கிய நடிகையாகத் திகழ்ந்தார். அஜீத், விஜய் என முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்தார்.

இடையில் அவர் படங்களில் நடிப்பதில் இடைவெளி விழுந்தது. உடம்பை ஸ்லிம்மாக்கி பழைய நமீதாவாக வலம் அவர் தற்போது ‘பார்வதி புறா' என்ற கன்னட படத்தில் நடிக்கிறார். தமிழிலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நமீதா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்திகள் மீடியாவில் உலா வந்தன. 


இதுகுறித்து கேட்டபோது, "நான் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு எப்போது படவாய்ப்புகள் இல்லாமல் போகிறதோ அப்போது திருமணம் செய்து கொள்வேன்," என்றார்.

0 comments:

Post a Comment