
சரத்குமார் இரு வேடங்களில் நடித்துள்ள 'சண்டமாருதம்' தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரமாண்டமாக இன்று ரிலீஸ் ஆகும் நிலையில் இந்த படம் ஜப்பான் மற்றும் சீனாவிலும் ரிலீஸ் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, என ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த படம் ஜப்பான் மற்றும் சீன மொழிகளின் சப்டைட்டிலோடும் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தற்போது கோலிவுட் ஸ்டார்களின் படங்கள் இந்திய அளவிலும், உலக அளவிலும் மார்க்கெட்டை பிடித்துள்ளது என்றும், இது கோலிவுட்டுக்கு கிடைத்த பெருமை என்றும் நேற்று மும்பையில் இந்த படத்தின் புரமோஷன் விழாவில் சரத்குமார் கூறியுள்ளார்.
சண்டமாருதம் படத்தில் சூர்யா, சர்வேஷ்வர் என இருவேடங்களில் சரத்குமார் நடித்துள்ளார். சூர்யா என்ற என்கவுண்டர் ஸ்பெசலிஸ் கேரக்டருக்காக சரத்குமார் 10கிலோ எடையை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் வில்லன் வேடமான சர்வேஷ்வரன் வேடத்தையும் ஏன் தேர்வு செய்து நடித்தேன் என்பதை படம் பார்க்கும்போது ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். ராதிகா சரத்குமாரின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஓவியா, மீரா நந்தன், சமுத்திரக்கனி, ராதாரவி, டெல்லி கணேஷ், சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர்.
0 comments:
Post a Comment