என்னை அறிந்தால் ரசிகர்களுக்கு கூடுதல் சீன்கள்
என்னை அறிந்தால் படத்தின் நீளத்தைப் பற்றித்தான் இப்போது பேச்சுக்கள் எழுந்துள்ளன. படம் ஓடும் நேரம் 2 மணி நேரம் 46 நிமிடங்கள்,
முன்னதாக 3 நிமிட ஆரம்ப டைட்டில்கள், பின்னதாக 3 நிமிட முடிவு டைட்டில்கள் 2 மணி நேரம் 52 நிமிடங்களாக இருக்கும். ஆனால், சென்சாருக்கு 3 மணி நேரம் 8 நிமிடம் ஓடும் படத்தைத்தான் கொடுத்திருக்கிறார்கள். அவர்களும் அதற்கு சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.
படம் வெளியாகிய பின் ரசிகர்கள் 2 மணி நேரம் 52 நிமிடத்தையும் ஆரவாரத்துடன் ரசித்தால் பின்னர் தேர்வு செய்யப்பட்ட சில திரையரங்குகளில் மட்டும் 3 மணி நேரம் 8 நிமிடம் ஓடும் படத்தைத் திரையிட முடிவு செய்துள்ளார்களாம். அதற்கும் அதிக வரவேற்பு இருந்தால், அனைத்துத் திரையரங்குகளிலும் கூடுதலாக அந்த 16 நிமிடக் காட்சிகளை இணைக்கவும் வாய்ப்புள்ளதாம்.
அஜித் படத்தைப் பொறுத்தவரையில் அவரது ரசிகர்கள் படம் முழுவதிலும் அஜித்தே வந்தால் கூட ரசித்துத் தள்ளி விடுவார்கள். மற்ற நடிகர்களுக்கும், படத்திற்கும் படத்தின் நீளம் ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அஜித் ரசிகர்கள் அதைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். பொதுவான ரசிகர்களும் படத்தை ரசிப்பதற்கு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் முதலில் 2 மணி நேரம் 52 நிமிடப் படமாம். அனைத்து ரசிகர்களும் கொடுக்கும் ஆதரவுதான் அடுத்து, படத்தின் நீளம் எவ்வளவு இருக்கும் என்பதைத் தீர்மானிக்கப் போகிறது.

0 comments:
Post a Comment