Tuesday, February 24, 2015

முன் ஜென்ம கதையை 80 களில் எடுத்து, அதுவும் ரஜினியை வைத்து எடுத்தவர் முத்துராமன்.
ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற பெயரில் வெளிவந்த அந்த படம் பெரும் வெற்றியை பெற்றது. இப்போது அந்த தயாரிப்பாளர் மிகவும் நொடித்துப் போயிருக்கிறார். இந்த படத்தின் ரீமேக் ரைட்ஸ் நல்ல விலைக்கு போகும் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்க, எவ்வித உரிமையையும் சட்டபூர்வமாக வாங்காமல் அரண்மனை என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்துவிட்டார் சுந்தர்சி. இரண்டு கதையும் ஒன்றுதான். சம்பவங்களும் கூட ஒன்றுதான் என்பதை இரு படங்களையும் பார்த்தவர்கள் நன்கு அறிவார்கள். ஆனால், இந்த பிரச்சனையை எழுப்பிய முத்துராமனுக்கு படம் வெளியாகும் வரைக்கும் இனிக்க இனிக்க பேசி ஏதோவொரு தொகையை தருவதாக உறுதியளித்திருந்த சுந்தர்சி, படம் வெளியான பிறகு எஸ்கேப் ஆகிவிட்டார். இது தொடர்பான பஞ்சாயத்து தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்தது. அப்போது வெறும் பத்து லட்சம் கொடுங்கள். போதும் என்றாராம் முத்துராமன். 
ஆனால் சுந்தர்சிக்கு ஆதரவாக பேசிய ஆர்.கே. செல்வமணி, விக்ரமன் போன்ற இயக்குனர்கள், பணம் தரவே முடியாது. நீங்க ஏன் கோர்ட்டுக்கு போனீங்க? அங்கேயே பணத்தை வாங்கிக்கோங்க என்று எடுத்தெறிந்து பேசினார்களாம். தெரியாம கோர்ட்டுக்கு போயிட்டேன். அதுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன். நஷ்ட ஈடு கொடுங்க என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறாராம் முத்துராமன்.

0 comments:

Post a Comment