Tuesday, February 24, 2015

இளையராஜாவுக்காக பிரம்மாண்டத்தை உருவாக்கும் கலைப்புலி தாணு - Cineulagam
தயாரிப்பு சங்கத்தலைவராக இருக்கும் கலைப்புலி தாணு மிக விரைவில் 1000 படங்களை பூர்த்தி செய்த இளையராஜாவுக்காக மிகப்பெரிய பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளார்.
ஏற்கனவே மும்பையில் இயக்குனர் பால்கி இளையராஜாவை கௌரவிக்கும் வகையில் ஷமிதாப் ஆடியோ விழாவை நடத்தினார்.
நேற்று தயாரிப்பு சங்கத்தில் இருக்கும் புதிய அம்மா உணவகத்தை கலைப்புலி தாணு அவர்களின் அழைப்பை ஏற்று இளையராஜா திறந்து வைத்தார்.
அப்போது மிக விரைவில் இளையராஜாவுக்காக மிகப்பெரிய பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்தப் போவதாக அறிவித்தார்.

0 comments:

Post a Comment