Sunday, February 8, 2015

ஜீவாவுக்கு ஜோடியாகும் ஸ்ரீதிவ்யா?
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் ஸ்ரீதிவ்யாவின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து விஷாலுடன் இணைந்து ‘ஜீவா’ படத்திலும், விக்ரம் பிரபுவுடன் இணைந்து ‘வெள்ளக்காரதுரை’ படத்திலும் நடித்திருந்தார். 

தற்போது சிவகார்த்திகேயன் - ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘காக்கி சட்டை’ படம் இம்மாதம் 27-ம்தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஜீவா நடிக்கவிருக்கும் புதுப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. யான் படத்திற்குப் பிறகு ஜீவா புது இயக்குனர் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் ஸ்ரீதிவ்யா ஜீவாவிற்கு ஜோடியாகிறார்.

ஸ்ரீதிவ்யா, ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து ‘பென்சில்’ படத்திலும், அதர்வாவுடன் இணைந்து ‘ஈட்டி’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகு ஜீவாவுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment