சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம் ‘மாஸ்’. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் ப்ரணிதா, சமுத்திரகனி, பார்த்திபன், மதுசூதன், ஸ்ரீராம், கருணாஸ், பிரேம்ஜி அமரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இறுதிகட்ட பணிகளில் தீவிரமாக இறங்கவுள்ளனர். திகில் கலந்த காமெடி படமாக உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தை அஜித் பிறந்த நாளான மே 1-ம்தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அஜித்தை வைத்து வெங்கட் பிரபு ‘மங்காத்தா’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. மங்காத்தா படப்பிடிப்பின்போது படக்குழுவினருக்கு அஜித் பிரியாணி செய்து விருந்து கொடுத்தார். இதன் காரணமாகவே வெங்கட் பிரபு, தான் இயக்கிய படத்திற்கு பிரியாணி என்று பெயர் வைத்தாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது சூர்யாவை வைத்து இயக்கி வரும் ‘மாஸ்’ படம் அஜித் பிறந்த நாளில் வெளியாவது, வெங்கட் பிரபுவுக்கும் அஜித்தும் உள்ள நட்பின் வெளிப்பாடாக இருப்பதுபோல் உள்ளது.
Monday, February 23, 2015
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment