Tuesday, February 10, 2015


கத்தி வசூலை முறியடித்ததா என்னை அறிந்தால்? முழு விவரம் - Cineulagam
 தமிழ் சினிமாவில் விஜய், அஜித் தான் தற்போதையே ஓப்பனிங் கிங்ஸ். இவர்கள் படங்கள் வருகிறது என்றாலே, அன்றைய தினம் தமிழகம் முழுவதும் திருவிழா தான்.இந்நிலையில் கடந்த வருடம் வெளிவந்த கத்தி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படம் கத்தி படத்தின் சாதனையை முறியடித்ததா? என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பு. 

பண்டிகை நாட்களில் வெளியான  கத்தி திரைப்படம் முதல் வார இறுதியில்(5 நாட்கள்) தமிழகத்தில் ரூ 36 கோடி வசூல் செய்தது, ஆனால், சாதாரண நாளில் வெளியான என்னை அறிந்தால் (4 நாட்கள்) ரூ 32 கோடி வசூல் செய்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது என்னை அறிந்தாலின் வசூல் திருப்திகரமனதாகவே இருக்கின்றது.

0 comments:

Post a Comment