Wednesday, February 4, 2015

Amala Paul to pair opposite Surya
இயக்குநர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார் அமலா பால். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர்களின் திருமணம் நடந்தது. அதன் பிறகு தமிழில் புதிய படங்களில் ஒப்பந்தமாகவில்லை அமலா.
அதே நேரம் சினிமாவிலிருந்து விலகுவதாகவும் அறிவிக்கவில்லை. ஒரு விளம்பரப் படத்தில் மட்டும் நடித்தார். மலையாளத்தில் மிலி என்ற படத்திலும் லைலா ஓ லைலா என்ற படத்திலும் நடித்தார். கடந்த வாரம் வெளியான மிலி பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
திருமணமான சில மாதங்களில் மீண்டும் நாயகியாக நடிக்கப் போகிறார் அமலா பால். முதல் படத்திலேயே சூர்யாவுடன் ஜோடி சேர்கிறார்.
இந்த நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த வேடத்தில் முதலில் ஜோதிகா நடிப்பார் என்று கூறப்பட்டது.
பின்னர் மஞ்சு வாரியர் நடிக்கிறார் என்று செய்தி வெளியானது. ஆனால், தற்போது அமலா பால் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யாவின் 2 டி நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

0 comments:

Post a Comment