த்ரிஷாவின் முன்னாள் காதலரை லவ்வும் சமந்தா?
சமந்தா நடிகை த்ரிஷாவின் முன்னாள் காதலரான நடிகர் ராணாவை காதலிப்பதாக ஆந்திராவில் பேச்சாக கிடக்கிறது. நடிகை த்ரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவர்கள் அவ்வப்போது பிரிவதும், சேர்வதுமாக இருந்தனர். இந்நிலையில் தான் த்ரிஷாவுக்கு சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் வருண் மணியனுடன் திருமணம் நிச்சமயாகிவிட்டது. ராணாவுக்கும் புதிய காதலி கிடைத்துவிட்டார் என்று தெலுங்கு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
தான் த்ரிஷாவை எப்பொழுதுமே காதலித்ததே இல்லை என்று ராணா அண்மையில் தெரிவித்திருந்தார்.
சமந்தாவும், நடிகர் சித்தார்த்தும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் பிரிந்துவிட்டனர்.
சித்தார்த்தை பிரிந்த சமந்தா ராணாவை காதலிப்பதாக தெலுங்கு பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளது. இதை சம்பந்தப்பட்ட இருவருமே மறுக்கவில்லை.
சமந்தா தற்போது தமிழ் படங்களில் தான் அதிக பிசியாக உள்ளார். அவர் தெலுங்கில் ஒரேயொரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

0 comments:
Post a Comment