Friday, February 20, 2015

 மோசமான இயக்கம் - நடிப்பு பிரபுதேவா, தமன்னாவுக்கு விருது  : பாலிவுட்டில் கலாய்ப்பு
சென்ற ஆண்டின் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு ஆஸ்கர் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன. ஹாலிவுட்டில் மோசமான படங்களை தேர்வு செய்தும் விருது அறிவிக்கப்படுகிறது. இந்த பாணி இதுவரை இந்தியாவில் இல்லாமல் இருந்தது. முதன்முறையாக மோசமான பாலிவுட் படங்களை தேர்வு செய்து கோல்டன் கேலா அமைப்பு விருதுகள் அறிவித்துள்ளது. பாலிவுட் நட்சத்திரங்களை கலாய்க்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பட்டியல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
‘ஹம்சகல்ஸ்'   இந்தி படத்தில் நடித்துள்ள தமன்னா, சயீப் அலிகான், ரிதேஷ் தேஷ்முக், பிபாசா பாஸு, இஷா குப்தா மற்றும் டைரக்டர் சாஜித் கான் போன்றவர்களுக்கும், ‘ஆக்ஷன் ஜாக்சன்' படத்தில் நடித்த அஜய் தேவ்கன், சோனாக்ஷி சின்ஹா மற்றும் டைரக்டர் பிரபுதேவா போன்றவர்களுக்கும் இந்த விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர சல்மான் நடித்த ‘கிக்' , ஹிருத்திக் ரோஷன் நடித்த ‘பேங் பேங்' , ஷாருக்கான் நடித்த ‘ஹாப்பி நியு இயர்'  ஆகிய படங்களும் மோசமான படங்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

0 comments:

Post a Comment