Monday, February 23, 2015

வில்லேஜ் விஞ்ஞானிகள் போல, சைலண்ட் சாதனையாளர்களும் இருக்கதான் செய்கிறார்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் 1969 ல் ‘நான் ஏன் பிறந்தேன்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ். அதற்கப்புறம் இதய வீணை, ஆட்டுக்கார அலமேலு, நீயா, எங்க சின்ன ராசா உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். அற்புதமான ஹிட் பாடல்களையும் கொடுத்திருக்கிறார்கள். அதில் பல பாடல்கள் ரஜினி கமல் நடிப்பில் வெளியானவை. நடுவில் சங்கர் மறைந்த பிறகும், கணேஷ் அதே பெயரில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்தார். இசையமைத்தும் வருகிறார்.
இவர் தற்போது பின்னணி இசையமைத்து தந்திருக்கும் படம் ‘எண்ணம் புது வண்ணம்’. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட எல்லா மொழி படங்களையும் சேர்த்து இது அவருக்கு 1552 படமாம்! இது நிஜம்தானா என்பதை நம்ப முடியாமல் அவரிடமே கேட்டால், ‘ஆமாம்…’ என்கிறார் கூலாக. ‘இறைவன் என் மூலமாக இசையை உலகத்திற்கு கொடுத்திருக்கான். இதில் நான் பெருமைப்பட என்ன இருக்கிறது’ என்கிறார் ரொம்பவும் பணிவாக!

0 comments:

Post a Comment