Wednesday, February 11, 2015


சிம்பு, ஹன்சிகா நடித்து வரும் 'வாலு' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் அந்த படத்தின் நான்கு தலைமுறை ஹீரோயின்களுடன் சேர்ந்து சிம்பு நடனம் ஆடும் ஒரு பாடல் மட்டும் இன்னும் படமாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.

இந்த பாடலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வெகுவிரைவில் இந்த பாடலின் படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.,

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்து ஹீரோயின் சரோஜாதேவி, கமல் மற்றும் ரஜினி காலத்து ஹீரோயின் குஷ்பு, விஜய் மற்றும் அஜீத் காலத்து ஹீரோயின் சிம்ரன் மற்றும் தற்போது மார்க்கெட்டின் உயர்ந்த நிலையில் இருக்கும் நயன்தாரா ஆகியோர் இந்த பாடலுக்கு நடனம் ஆட உள்ளனர்.

சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ், உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரித்து வரும் இந்த படத்தை விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் மார்ச் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment