Thursday, February 12, 2015

குறுகிய காலத்தில் உச்சத்தை எட்டியவர் இளம் இசையமைப்பாளர் அனிருத்.
இதுவரை இவர் இசை அமைத்த அனைத்து படத்தின் பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றது. சமீபத்தில் இவரது இசையில் வெளிவந்த கத்தி படத்தின் பாடல்கள் கூட ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. விரைவில் இவர் இசையமைத்த காக்கி சட்டை படமும் திரைக்கு வரவிருக்கிறது.
இந்நிலையில் விஜய்யை தொடர்ந்து அஜித்தின் அடுத்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அஜித் ‘என்னை அறிந்தால்’ படத்துக்குப் பிறகு ‘வீரம்’ சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் இப்படத்தையும் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் தான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார் அனிருத். அனிருத் இசையமைக்க இருக்கும் முதல் அஜித் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடந்து வருகிறது. படபிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. அனிருத் இதுதவிர தெலுங்கில் ராம்சரண் நடிக்கவிருக்கும் புதிய படம், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் புதிய படம் என அடுத்தடுத்து பெரிய இயக்குநர்களின் படங்களுக்கும் அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

0 comments:

Post a Comment