Thursday, February 12, 2015

நாகார்ஜுனாவுடன் இணைந்து நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கிறார் கார்த்தி.
இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது. தெலுங்கில் படத்துக்கு காஷ்மோரா என தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் கார்த்தி ஜோடியாக முதன் முறையாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். மேலும் படத்தில் அவாரா சாஸ்திரி, ஜெயசுதா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தை பிவிபி சினிமாஸ் தயாரிக்கிறது. வம்சி பிடிபாலி இயக்குகிறார். கோபி சுந்தர் இசையமைக்கிறார். ‘மனம்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் 16-ஆம் தேதி துவங்கவிருக்கிறது.
இதனிடையே படத்தின் பூஜை நேற்று ஹைதராபாத்திலுள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நாகார்ஜுனாவின் மகன்கள் நாக சைதன்யா, அகில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment